Saturday 12 September 2015

சிறுநீரக கற்கள் கரையபிரஞ்சு பீன்ஸ் :

சிறுநீரக கற்கள் கரையபிரஞ்சு பீன்ஸ் :

இதை விதைகளை நீக்கிவிட்டு நன்றாக கொதிக்க வைத்து அதை நன்றாக அரைத்து தினம் 3 நேரம் குடித்து விட்டு 15 நிமிடம் கழித்து 4 தம்ளர் நீர் அருந்தவும்.

அதனால் சிறுநீர் கற்கள் உடைபட்டு சிறுநீருடன் வெளிவந்துவிடும். அது வெளிவரும் நேரம் நல்ல வலி இருக்க வாய்ப்புள்ளது.

நீர் அதிகம் குடித்தால் சீக்கிரம் வெளிவந்துவிடும்.

வாழைத்தண்டு சாறு:வாழைத்தண்டு சீறு சிருநீரக கல் வராமல் தடுக்கவும் வந்தால் அது கரைந்து விடவும் மிக நல்லது . எனவேவாழைத்தண்டு சாறு எடுத்த தினமும 3 வேளைகளில் குடித்து வந்தால் சிருநீரக கல் கரைந்துவிடும். வாழைத் தண்டு மட்டுமல்லாது வாழைப்பூவும் சிறுநீருக்கு நல்லது.வாழைச் சாறு:சரியான முறைப்படி வாழைமரத்தின் கீழ் தோண்டி அதன் வேரை அறுத்து, ஒரு சிறிய பாலித்தின் பை அல்லது சிறிய பிளாஸ்டிக் கண்டைனரில் அந்த வேர்கள் இருக்கும்படி வைத்து கட்டிவிட்டு அடுத்த நாள் காலையில்சென்று பார்த்தால் வேரின் வழியாக சாறு வடிந்திருப்பதை காணலாம். அதை அப்படியே குடித்துவிட்டால் போதும்.

துளசி:துளசி இலையின் சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து ஆறு நாட்கள் உட்கொண்டால் திருநீரகக்கல் உடையும்

மாதுளை:இந்த பழத்தின் விதையை பிழிந்து 2 ஸ்பூன் கொள்ளு (காணம்) சாருடன் (ஒன்றுக்கு இரண்டு என்ற விகிதாசாரத்தில்) சேர்த்து சாப்பிட்டால் கல் கரையும்.

அத்திப்பழம்:இதை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் காலையில் வறும் வயிற்றில் அருந்தி வரலாம்.

சிறுநீரகக்கல் வராமல் தடுக்க:நோய் வந்தபின் மருத்துவரை அணுகுவதை விட அது வராமல் தடுப்பதே மிகச்சிறந்தது.சிறு நீரகக்கல் உருவாவதை தடுக்க நீங்கள் செய்ய வேண்டிய ஒரே வழிமுறை நீர் அருந்துதல். தினமும் குறைந்தது 1 லிட்டர் தண்ணீராவது அடிக்கடி குடித்து வந்தால் உடல் கழிவுகள் எளிதாக வெளியேற துணைபுரிவதால் சிறுநீரகத்திற்கு அதிக வேலைப்பளு கொடுக்காமல் அதில் உப்புக்கழிவுகள்கட்டிப்படுவதையும் குறைக்கும்.

அதே போல நீர்த்தன்மை அதிகம் கொண்ட பழங்களான இளநீர், திராட்சை, ஆரஞ்சு, தர்ப்பூசணி அதிகம் உட்கொளளலாம்.

No comments:

Post a Comment