Friday 20 March 2015

சூரிய சக்தி மூலமே இயங்கக்கூடிய சோலார் இம்பல்ஸ விமானம

சூரிய சக்தி மூலமே இயங்கக்கூடிய சோலார் இம்பல்ஸ விமானம்

சுவிஸ் நாட்டை சேர்ந்த மனோதத்துவ நிபுணரும், வானியலருமான பெர்ட்ரான்ட் பிச்சார்ட் என்பவரால் உருவாக்கபட்டது, இது முழுக்க முழுக்க சூரிய சக்தி மூலமே இயங்கக்கூடியது. லோ ரேஞ்சு விமானம் எனப்படும் சோலார் இம்பல்ஸ் 1 ஐ 2013ம் ஆண்டு உருவாக்கி மொராக்கோ முதல் அமெரிக்கா வரை பறந்து காட்டினார், இதன் வெற்றியை தொடர்ந்து அவர் உழைப்பால் உருவானதுதான் இந்த சோலார் இம்பல்ஸ் 2,

ஒருவர் மட்டுமே பயணிக்க கூடிய வகையில் உள்ள இந்த விமானம் இலகு ரகத்தை சேர்ந்தது, மற்ற சாதாரண விமானங்களை போலவே, இதிலும் ஆடோ பைலட் வசதி, சப்ளிமெண்டல் ஆக்சிஜன் எனப்படும் அசாதாரண காலநிலையும் சாதாரண காற்றை வழங்கும் கருவி என இருக்கு, அனால் இதன் அசாதாரண இறகுகள் கிட்டத்தட்ட உலகின் மிகப் பெரிய விமானமான ஏர் பஸ் ஏ 380ன் இறக்கை அளவுக்கு நீளமானது, இதன் மற்ற விபரங்கள்.

பயணி : ஒருவர்
நீளம் : 22.4 m (73.5 ft)
இறக்கை நீளம் : 71.9 m (236 ft)
உயரம் : 6.37 m (20.9 ft)
இறக்கை அமைவு : 17,248 போட்டோ வோல்டிக் செல்களுடன் 66 kW அதிகபட்சமாக வழங்க கூடியது (269.5 m2)
அதிகபட்ச எடை : 2,300 kg (5,100 lb)
மின் திறன் : 4 × எலக்ட்ரிக் மோட்டர்கள், ஒவ்வொன்றும் ௪௧ கிலோவோல்ட் சக்தி கொண்ட லிதியம் - இயன் பாட்டரிகள், (4 x 41) எடை - 633 kg, மொத்த வெளியிடும் திறன் 13 kW[54] (17.4 HP)
ப்ரோபல்லர் அளவு : 4 மீட்டர் (13.1 அடி)
மேலெழும் வேகம் : மணிக்கு 35 கிலோ மீட்டர்கள்.

ஓடு திறன்:

அதிகபட்ச வேகம் : 77 நாட் அதாவது 140 கி.மீ/மணி
மித வேகம் : 90 கி.மீ/மணி ( இரவில் மின் சேமிப்பிற்காக (பவர் சேவர் மோட்) 60 கி.மீ/மணி)
பறக்கும் திறன் : 8,500 மீ (27,900 அடி) அதிக பட்ச உயரம் 12,000 மீ (39,000அடி)

மார்ச் 9 தொடங்கி உலகை முழுமையாக சுற்றி வர உள்ளது, பாதை - அபு தாபி ( அரபு எமிரட்ஸ்) மஸ்கட் (ஓமன்), அகமதாபாத், வாரணாசி (இந்தியா), மண்டலே (மியான்மர்), சான்-கிங், நான்-ஜிங் (சீனா), ஹவாய், போனிக்ஸ், நியூ யார்க் ( அமெரிக்கா), மொராக்கோ வழியாக மீண்டும் அபு தாபி.

No comments:

Post a Comment