Friday 20 March 2015

மனிதர்களின் வாழ்நாளை அதிகபட்சமாக 500 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும்


மனிதர்களின் வாழ்நாளை அதிகபட்சமாக 500 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும் என்று கூறி கூகுளின் புதிய ஆய்வுகளுக்கான தலைமை அதிகாரி பில்மார்ஸ் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

கூகுள் நிறுவனம் தகவல் தொழில்நுட்ப துறை தவிர மற்ற பிற துறைகளிலும் பெரும் முதலீடுகளைச் செய்து தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக மரபணு, புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவது மற்றும் மனிதர்களின் வாழ்நாளை அதிகரிப்பது அதாவது முதுமையைத் தடுக்கும் துறைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

இந்த ஆய்வுகளை தலைமையேற்று நடத்திவரும் பில் மார்ஸ் இந்த ஆய்வு பற்றி கூறுகையில், "மனிதர்களின் வாழ்நாட்களை அதிகரிப்பதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறோம். மரணத்தைத் தடுக்க முடியாது. ஆனால், கண்டிப்பாக நீண்ட நாட்கள் வாழ வைக்க முடியும்" என்று தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் இதற்கான ஆய்வுகள் நடந்து வருகின்றன. இதுவரை மனிதர்களின் ஆயுளை 120 ஆண்டுகள் வரை நிச்சயமாக நீட்டிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறி வந்த நிலையில், கூகுள் அதை 500 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும் என கூறியிருப்பது அனைவரையும் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

No comments:

Post a Comment